இந்தியா பற்றி குட்டி தகவல்கள்..கண்டிப்பாக தெரிய வேண்டியவை!!

அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரியது - ஹரியட்.
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான பல்கலைக்கழகம்- சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் நிறுவப்பட்டது.
இந்தியாவில் அதிகளவில் விமான நிலையங்கள் உள்ள மாநிலம் - குஜராத் (9 விமான நிலையங்கள்)
உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் -1950 ஜனவரி 28.
வடஇந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர்- விந்திய மலைத் தொடர்
இந்தியாவில் விமான சேவை 1953-ம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.
புலிக்கு முன்பு இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது - சிங்கம்.
இந்தியாவில் முதல் பருத்தி ஆலை நிறுவப்பட்ட ஆண்டு : 1818-ம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது.
டெல்லி செங்கோட்டையின் ஆரம்ப காலப் பெயர்: கிலா-ஏ-முபாரக்.
இந்தியாவில் உள்ள தீவுகளில் மிகப்பெரியது - கிரேட் நிகோபார்.