பாம்புகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

உலகில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ!
600 வகைப்பாம்புகளே விஷம் கொண்டவை. இதிலும் 200 வகை பாம்புகளே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டவை.
நாகப்பாம்பு (நல்லபாம்பு), கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன் என 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி வாழும் தன்மை கொண்டவை.
நாகப்பாம்பு பொதுவாக பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்டிருக்கும். எலியின் வளை மற்றும் கரையான் புற்றுகளையும் வசிப்பிடமாக்கிவிடும்.
சாரைப்பாம்பு, நீர்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, தண்ணீர் பாம்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஒருசில பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. அவற்றில் நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும்.
பாம்பிற்கு 200 முதல் 400 முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் நன்கு விரியக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை உட்கொள்ள உதவுகின்றது.
வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாம்புகளை துன்புறுத்துவதோ, கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம்.