இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்.!!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும், 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய அவர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிலும் மகுடம் சூடியிருக்கிறார்.
உலக சாம்பியன்ஷிப்பில் மட்டும் 5 பதக்கம் கைப்பற்றி இருக்கும் அவர் ஆசிய, காமன்வெல்த் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக பட்டங்கள் வெல்ல முடியாமல் சறுக்கலை சந்தித்த சிந்து, சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டனில் கோப்பையை வென்று ஏக்கத்தை தணித்தார்.
இந்நிலையில் 29 வயதான பி.வி.சிந்து இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்.
இவர் ஐதராபாத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகியான வெங்கட தத்தா சாய் என்பவரை மணக்க உள்ளார்.
இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் நகரில் 22-ந் தேதி நடைபெறுகிறது.