அலைகள் மோதும் கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம்..எந்த நாட்டில் இருக்கிறது?
நம் இந்தியாவில்தான் அமைந்திருக்கிறது. விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்குமுன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும்.
முதன் முதலாகப் பார்ப்பவர்களுக்கு திகிலுடன் கூடிய ஆச்சரிய நிகழ்வாக இது தோன்றும். ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள்.
சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று.
அரபிக் கடலில் இருக்கும் 36 தீவுகளைக் கொண்ட லட்சத்தீவு, மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத்தலமாகும்.
கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந்த அகட்டி தீவில்,1988-ல் விமான சேவை தொடங்கியது.
இங்கு விமானங்கள் இறங்க, 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரன்வேயின் நீளம், 1,204 மீட்டர்கள். அகலம், 360 மீட்டர்களாகும் .
பயணிகள் இங்கு இறங்கியதும், கப்பல்கள் மூலம் மற்ற தீவுகளுக்குச் செல்லலாம்.
சுற்றிலும் கடல் நீர் இருக்கும் இந்தத் தீவுக்கு, பெங்களூரு, கொச்சியில் இருந்து சிறிய வகை விமானங்கள் இயக்கப்படுகின்றன.