கோடைகாலத்தில்.. ரெண்டே நிமிடத்தில் ஜில் ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி..!

பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஜூஸ் செய்து கொடுக்கலாம். குளுகுளு மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பழுத்த மாம்பழம், தேன், ஐஸ் கியூப்ஸ்
செய்முறை : முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
சில துண்டுகளை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்
மிக்சியில் மாம்பழ துண்டுகள், தேன், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள் மற்றும் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்..
கோடைகாலத்தில் பருக வேண்டிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான சத்தான மாம்பழ ஜுஸ் ரெடி.