ரமலான் நோன்பு ஸ்பெஷல் மட்டன் கஞ்சி செய்வது எப்படி?

ரமலான் நோன்பு ஸ்பெஷல் மட்டன் கஞ்சி செய்வது எப்படி?

ரமலான் நோன்பு ஸ்பெஷல் மட்டன் கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : அரிசி, வறுத்த சிறு பருப்பு, எலும்பில்லாத மட்டன், பெ.வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள் தூள், மசாலா தூள், மிளகாய் தூள்,தக்காளி, பட்டை, ஏலக்காய், இஞ்சி- பூண்டு விழுது ஆகியவை.
ரமலான் நோன்பு ஸ்பெஷல் மட்டன் கஞ்சி செய்வது எப்படி?
செய்முறை: அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
ரமலான் நோன்பு ஸ்பெஷல் மட்டன் கஞ்சி செய்வது எப்படி?
முதலில் வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை பொடிதாக நறுக்கி கொள்ளவும்
குக்கரில் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு மற்றும் நறுக்கிய காய்கறிகள் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம். சுவையான மட்டன் கஞ்சி ரெடி.