சிக்கன் பிரியாணிக்கு டப் கொடுக்கும் காளான் பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி, காளான், தக்காளி, வெங்காயம், சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு, சீரகத்தூள், இஞ்சி, உடைத்த முந்திரி, எண்ணெய், நெய், உப்பு ஆகியவை.
முதலில் அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.
பின்னர் காளான், இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனி தனியாக வைத்து கொள்ளவும்.
அடுத்து தக்காளியின் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, சூடானதும் காளான் சேர்த்து.. அதில் இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும்.
பின்பு அதில் தக்காளிச் சாறு ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அடுத்து தேவையான நீர் சேர்த்துக் கொதித்தவுடன் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் நிறுத்தவும்.
பின்பு குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும். சூப்பரான ஸ்பைஸி காளான் பிரியாணி ரெடி.