கேரளா ஸ்டைல் ராகி லட்டு செய்வது எப்படி?

ராகியில் உள்ள சத்து பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு மிகவும் நல்லது. இன்று ராகியில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : ராகி மாவு, வெல்லம், நெய், முந்திரி பருப்பு, கருப்பு எள், உலர் திராட்சை, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவை.
முதலில் அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எள்ளை கொட்டி மிதமான தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
ராகி மாவுடன் வெல்ல பாகு, உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை கொட்டி கிளறி இறக்கவும்.
சூடு ஆறியதும் உருண்டை (லட்டு )வடிவில் பிடித்து சுவைக்கவும்.
இந்த ஆரோக்கியம் நிறைந்த ராகி லட்டுவை குழந்தைகள் விரும்பு உண்ணுவார்கள்.