வெயிலுக்கு ஏற்ற இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
வெயிலுக்கு ஏற்ற இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கெட்டியான பால், இளநீர் வழுக்கைத் துண்டுகள், தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த் தூள், முந்திரி ஆகியவை.
வெயிலுக்கு ஏற்ற இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
முதலில் சிறிது இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
வெயிலுக்கு ஏற்ற இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த் தூள் ஆகியன சேர்த்து கொதிக்க விடுங்கள்.
பிறகு தேங்காய் பால் சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது இளநீர் பாயாசம் ரெடி.
இளநீர் பாயாசத்தின் மீது இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி ஆகியன சேர்த்து அலங்கரித்து பருகலாம். அது இன்னும் சுவையைக் கூட்டும்.