மழை நேரத்தில் சாப்பிட சூடான அரிசி மாவு போண்டா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: அரிசி மாவு, சீரகம், பூண்டு, இஞ்சி, வேர்கடலை, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை
ஒரு மிக்ஸியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும். அதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும்.
பின்னர் வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் போண்டா மாவை சிறு சிறு உருண்டைகளாக போடவும்.
அடுப்பை மீடியம் தீயில் வைத்து சமைக்கவும். போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.
இதோ மழைக்கு இதமான கிரிஸ்பியான அரிசி மாவு போண்டா ரெடி.
இதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட சட்னி, அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்.