தேவையான பொருட்கள் : பச்சரிசி, வெள்ளை உளுந்து, வெண்ணெய், எள்ளு, மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீர், எண்ணெய்
முதலில் பச்சரிசியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பெரிய துணி விரித்து அதன் மேல் பரப்பி போட்டு காய வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து உளுத்தம் பருப்பை போட்டு வறுக்க வேண்டும். பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் அந்த உளுத்தம் பருப்பும் மற்றும் காய வைத்த பச்சரிசியை எடுத்து ஒரு மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பொடியாகும் படி அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் இந்த மாவை சல்லடை வைத்து சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த மாவில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகாய் தூள், வெண்ணெய், எள்ளு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
பின்னர் மாவில் சூடான தண்ணீரை ஊற்றி பிசைய வேண்டும். மிகவும் அதிக தண்ணீர் ஊற்றி விட கூடாது. ஓரளவிற்கு மாவு மென்மையான பதத்தில் இருக்குமாறு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பெரிய கடாயில் முறுக்கு சுடத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடான பின்பு முறுக்கு பிழியும் உலக்கையில் மாவை போட்டு அந்த எண்ணெயில் பிழிந்து விட வேண்டும். இரு புறமும் திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுத்து விட வேண்டும்.