சுவையான மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : அரிசி மாவு, மைதா, சர்க்கரை, தேங்காய் பால், ஏலக்காய் தூள், உப்பு, எண்ணெய்
முதலில் சக்கரையை ஒரு மிக்ஸியில் நன்கு மசிய அரைத்து சல்லடை கொண்டு நன்கு சலித்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து பாதிக்கு பாதி அளவு சலித்த அரிசி மாவு மற்றும் மைதா மாவை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சர்க்கரை பொடி, ஏலக்காய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்ததாக அதில் தேங்காய் பால் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.
பின்னர் அதில் தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து அச்சு முறுக்கு செய்ய தேவையான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் சேர்த்துக் எண்ணெய்யை சூடாக்கி அதில் அச்சு முறுக்கு செய்ய தேவையான அச்சை வைக்கவும்.
பின்னர் அந்த அச்சை கலந்து வைத்துள்ள மாவில் அழுத்தி அதனை சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மொறு மொறு அச்சு முறுக்கு ரெடி.