வீட்டிலேயே தித்திப்பான பாதாம் பூரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : மைதா மாவு, சர்க்கரை, நெய், தேங்காய் துருவல், எண்ணெய், அரிசி மாவு, தண்ணீர், உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய், ஏலக்காய் பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து, 10 நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து, சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும்.
அடுத்ததாக பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து பூரியை போல் தேய்த்துக் கொள்ளவும்.
பின்பு பூரியை முக்கோண வடிவில் எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி).
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.
பொரித்து சுடச்சுட உள்ள பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.
அதன் மேல் துருவிய தேங்காயை தூவினால் சுவை அதிகரிக்கும். சாப்பிடும்போது இனிமையாக இருக்கும்.