வெயிலுக்கு இதமான மோர் குழம்பு செய்வது எப்படி.!

வெயிலுக்கு இதமான மோர் குழம்பு செய்வது எப்படி.!

வெயிலுக்கு இதமான மோர் குழம்பு செய்வது எப்படி.!
மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
வெயிலுக்கு இதமான மோர் குழம்பு செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள் : மோர், தேங்காய், தனியா, சீரகம், பச்சை மிளகாய், கடுகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய், எண்ணெய், உப்பு ஆகியவை.
வெயிலுக்கு இதமான மோர் குழம்பு செய்வது எப்படி.!
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.
அடுத்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளற வேண்டும்.
இப்படி செய்தால் சூப்பரான மோர் குழம்பு ரெடி!!!