கோடை காலம் என்றால் அதிகளவு நீர் பருக வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் அறிவுரை. வெயில் காலங்களில் தண்ணீர் குடிப்பதால், உடல் சூட்டைக் கட்டுப்படுத்தலாம்.
6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பணியில் ஈடுபடும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலகட்டத்தில் முதியோர் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம்.
உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
குழந்தைகளை வெயிலில் இருந்து காக்க குடை பயன்படுத்துவது சிறந்தது. வயதானவர்கள் வெயில் நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்ப்பது நல்லது