நாம் சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை பாக்டீரியாக்கள் கெட்டுவிடச் செய்கிறது. இப்படிக் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் உணவு நஞ்சாதல் என்கிறோம்.
சமைத்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவதும் உணவு நஞ்சாவதற்கு மற்றுமொரு காரணம் ஆகும்.
உணவு நஞ்சாவதைத் தடுக்க
சமைத்த 4 மணி நேரத்திற்குள் உணவை சாப்பிடுவது நல்லது.
வெளியிடங்களில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உணவு சமைப்பதற்கு மற்றும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாகத் கழுவ வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திய பின்பு பயன்படுத்த வேண்டும்.
மலம் கழித்த பின்பு கைகளை நன்கு தூய்மை செய்ய வேண்டும்.