முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரலாறு..!

மன்மோகன் சிங் 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதி பஞ்சாப்பில் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேற்படிப்பை 1957ல் முடித்தார். தொடர்ந்து 1962ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
மன்மோகன் சிங், 1966 -1969 இல் ஐ.நா. சபையில் பணியாற்றினார். பின்னர் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக பணியாற்றினார்.
இவர் (1972 -1976) மத்திய அரசில் தலைமை பொருளாதார ஆலோசகர், (1982 -1985) ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் (1985 -1987) திட்டக் குழுவின் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளில் வகித்துள்ளார்.
1991ம் ஆண்டு மன்மோகன் சிங், நிதி மந்திரியானார். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த வேளையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதை சமாளித்தார்.
கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது, பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொடர்ந்து 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று பிரதமராக தொடர்ந்தார். தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக மக்களை வழிநடத்தினார்.
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சீக்கிய பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மன்மோகன் சிங் (92 ) உடல்நலக்குறைவால் டிசம்பர் 26ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.