இன்று முதல் பப்பாளி நம்ம பங்காளி..பப்பாளியில் நிறைந்திருக்கும் பயன்கள்..!
பப்பாளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலேட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் கூந்தலை மென்மையாக்கவும், பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
பப்பாளியில் வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது.
பப்பாளியில் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் லுடீன் போன்ற பிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகளவு காணப்படுகின்றன. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான எடை இழப்பிற்கு வழிவகுக்கிறது.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.