குதிரைவாலி அரிசியின் ஆரோக்கியமான நன்மைகள்..!

குதிரைவாலி அரிசியில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் , இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
குதிரைவாலி அரிசியில் குறைவான கிளைசெமிக் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாகும்.
இதிலுள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
குதிரைவாலி அரிசியில் அதிகளவு நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருப்பதால், உடல் எடையை பராமரிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
குதிரைவாலி அரிசியில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
குதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குதிரைவாலி அரிசியில் தயமின் சேர்மம் நிறைந்து காணப்படுகிறது. இது சிறந்த உறக்கத்திற்கு வழிவகுக்கலாம்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண் பார்வை பிரச்சினைகள் வராமல் தடுக்கக்கூடும்.