இயற்கை எழில் நிறைந்த இடங்களுக்கு தீபாவளி டூர் ப்ளான் போட்டாச்சா?
குன்னூர் : தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இடம் தான் குன்னூர். தேயிலைத் தோட்டங்கள், பச்சைப் பட்டு உடுத்தியது போல மலைத் தொடர்கள் அனைத்தும் அனைவரின் கண்களை வெகுவாக கவரும்.
ஏற்காடு : தமிழ்நாட்டின் அழகிய மலைவாசஸ்தலமான ஏற்காட்டிற்கு குறைந்த செலவில் மக்கள் சென்று வரலாம்.. குளிர்ச்சியான கிளைமேட், போட்டிங், மலை ஏற்றம் என அனைத்தும் வெகுவாக சுற்றுலாப் பயணிகளை கவரும்.
மூணாறு : கேரள மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்று தான் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு. எங்கு பார்த்தாலும் பச்சைப் பட்டு உடுத்தியது போல அழகிய தேயிலை தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், எரவிகுளம் தேசிய பூங்கா, போட்டிங் என பல இடங்கள் இங்கு அமைந்துள்ளது.
கூர்க் : கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தளங்களில் ஒன்று கூர்க். தனிமையை விரும்புபவர்கள், இயற்கையின் அழகை பொருமையாக பார்க்க விரும்புவோர் தேர்வு செய்யும் இடம் தான் கூர்க்.
அரக்கு பள்ளத்தாக்கு : ஆந்திர மாநிலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இடம் தான் அரக்கு பள்ளத்தாக்கு. அடர்ந்த காடுகள், கண்களைக் கவரும் மலைகள், அமைதியான சூழல் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும்.
சக்லேஷ்பூர் :கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இடம் தான் சக்லேக்பூர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற டிரக்கிங், நீர் வீழ்ச்சிகள், அழகிய மலைகள் என அனைத்தும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஊட்டி : தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இடம் தான் ஊட்டி. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியின் மலை ரயில், மலர் கண்காட்சி என அனைத்தும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
வாகமன் : கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில்மிகு மலைவாசஸ்தலம் தான் வாகமன். இந்த மலையின் உச்சியில் நின்று கேரளத்தின் அழகை ரசிக்க ஏற்ற மலையாகவும், பசுமையான சமவெளிகள், விண்ணை முட்டும் மலைகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.