மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கான பழக்கவழக்கங்கள்!
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்போது, மனதில் தன்னம்பிக்கையும், இலக்கை அடையும் ஆற்றலும் உருவாகும். இதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
30 நிமிடமாவது தசைகளை அசைத்து செய்யும் எளிய வகையிலான பயிற்சிகளைச் செய்யலாம். இதன் மூலம் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். நினைக்கும் இலக்கை எளிதில் எட்ட முடியும்.
பிறர் நமக்குச் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வது நல்ல பழக்கம். அதேசமயம் உங்களைச் சுற்றி நேர்மறையான செயல்கள் நடைபெறுவதற்காக, இயற்கைக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துங்கள்.
காலை முதல் இரவு வரை உங்களின் ஒவ்வொரு செயலுக்கும், கிடைக்கும் ஒவ்வொரு நன்மைக்கும் நன்றி செலுத்தி, இயற்கையை மனதார ரசியுங்கள். இந்தப் பழக்கம் உங்களுக்குள் நல்ல எண்ணங்களை எளிதாகக் கொண்டு வரும்.
மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் தேவை. இரவில் தினமும் 8 மணி நேரம் எந்தவித இடையூறும் இன்றி ஆழ்ந்து உறங்க வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு முன்பு மொபைல், டி.வி, கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்களைத் தவிர்க்க வேண்டும்.
மூளை சீராக செயல்படுவதற்கு, உடலுக்கு 73 சதவீதம் நீர்ச்சத்து தேவை. உடல் நீரேற்றத்துடன் இருக்கும்போது, எண்ணங்களும் தெளிவாகும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மனதைப் பாதிக்காமல் இருக்கும்.
இயந்திர மயமான உலகில், உங்களை ஒன்றிணைக்கும் போது, மனம் சோர்வடையும். இதன் காரணமாக மன அழுத்தம், பலவித வியாதிகள் போன்றவை அணிவகுக்கும்.
தினமும் ஒரு மணி நேரமாவது, உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு கலையை மேற்கொள்ளுங்கள். ஓவியம் வரைவது, வீட்டை அழகு படுத்துவது, நடனம், பாட்டு என மனதுக்குப் பிடித்த செயல்களை மேற்கொள்ளுங்கள்.