சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அருமையான புரத உணவுகள்!

சோயா பீன்ஸ்: சோயா பீன்ஸ் மற்றும் சோயா பொருட்களில் புரத சத்து நிறைந்திருப்பதால் அவை தசை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 100 கிராம் சோயாபீன்ஸ் 36 கிராம் புரதத்தை அளிக்கிறது.
பருப்பு: பயிறு மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. அவரை, தட்டைப்பயறு, பச்சைப்பட்டாணி, பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை: கொண்டைக்கடலை தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். வைட்டமின் பி, செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் ஆகியச் சத்துகள் அதிகளவில் உள்ளன.
நட்ஸ் வகைகள்: பாதாம், வால்நட்ஸ், முந்திரி ஆகியவற்றில் உடலுக்கு தேவையான புரதங்கள் அதிகம் கிடைக்கின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவு இந்த நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ள நல்ல மாற்றம் காணலாம்.
சீமைத்தினை: இதில் அமினோ அமிலங்கள், புரதங்கள், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் ஈ, பொட்டாசியம், இரும்பு ஆகிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
வேர்க்கடலை: மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கும் வேர்க்கடலையை, ஊறவைத்து சாப்பிடும்போது புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து ஆகியவை கிடைக்கின்றது.
டோபு: அசைவ உணவை விரும்பாதவர்களின் மாற்று உணவாக இருக்கும் டோபு பல பயனுள்ள உயர் புரதத்தை கொண்டுள்ளது. புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், என பல்வேறு வகையான சத்துக்கள் இதில் அடங்கியிருக்கிறது.
மேலும் புரோக்கோலி, காளான், சோளம், கேழ்வரகு, முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றிலும், பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பன்னீர் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.