உடல் எடை முதல் இதய ஆரோக்கியம் வரை...கருங்குறுவை அரிசியின் நன்மைகள்..!
கருங்குறுவை அரிசியில் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும்.
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.
கருங்குறுவையில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இவை ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
கருங்குறுவை அரிசி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகொண்டது.
கருங்குருவை அரிசி கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் இருக்கும் பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம், ரத்த சோகை பிரச்சினையை குறைக்கலாம்.
இது உடலில் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கக்கூடும்.
இதில் கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.