கோடைக்கால பிரச்சினைகளை சரிசெய்யும் இளநீர்..!

கோடை காலம், குளிர்காலம் என எல்லா காலங்களிலும் நமது உடல் உஷ்ணத்தை குறைக்க அதிகமாக உதவுவது இளநீர்.
இளநீரில் வைட்டமின்-சி, அமினோ அமிலங்கள், நார்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இளநீரில் குறைந்த அளவே கொழுப்புகள் இருப்பதினால் இதை தினமும் அருந்துவதன் மூலம் நமது எடையையும் குறைக்க முடியும்.
கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் போன்ற அனைத்தையும் இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தடுக்கக்கூடும்.
இளநீரை அருந்துவதன் மூலமாக நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றி விடலாம்.
நம் சருமத்தில் இருக்கும் புள்ளிகள், கருவளையங்கள், பருக்கள் போன்ற எல்லாவற்றையும் இளநீரை அருந்துவதன் மூலமாக மறையச் செய்யலாம்.
புற்றுநோயை எதிர்க்கும் தன்மை இளநீருக்கு உள்ளது. எனவே இதை அருந்துவதன் மூலம் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை ஆரம்பத்திலேயே அழித்து விடலாம்.
இதில் பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த மினரல்கள் உள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம்தான் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கும் இளநீர் சிறந்த தேர்வாக இருக்கும்.