ஆரோக்கியமான வாழ்க்கைக்கு... வழுவழுப்பான வெண்டைக்காய்..!

வெண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இது கெட்டக் கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
வெண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இவை நோய் தொற்று, சளி, இருமல் போன்றவற்றை வராமல் தடுக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் இருக்கிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.
வெண்டைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வெண்டைக்காயை உணவில் சேர்த்து வருவதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் ஏ கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வெண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
இதய ஆரோக்கியத்தை பராமரிக்க வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.