சர்க்கரை நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன.
இருதய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, இதய தசைநோய் (Cardiomyopathy), உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மன ஆரோக்கிய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினால் கோபம், எரிச்சல், வெறுப்பு, சலிப்பு போன்றவை ஏற்படலாம்.
கண் பாதிப்பு: கண் விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய்(Glaucoma), கண்புரை போன்ற கண்பார்வை குறைபாடு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சிறுநீரக பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தநாளங்கள் மற்றும் சிறுநீரக செல்கள் பாதிப்படைவதால் சிறுநீரகங்கள் வீக்கம் அடைகின்றன. ரத்தம் வடிக்கட்டும் செயல்பாடு குறைவதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
நரம்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து, டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சரும பிரச்சினைகள்: நீரிழிவு நோயாளிகள் சருமத்தில் கருமையாதல், சருமத்தில் தடிப்பு உருவாகுதல்(Acanthosis Nigricans) அகான்த்தோஸிஸ்நைக்ரிகன்ஸ், தோல்தொற்று, கொப்பளங்கள், தோல்வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து தொற்றுகள் ஏற்பட வழி வகுக்கிறது.
நீரிழிவு மாத்திரைகளை சரியான நேரத்திலும், அளவாகவும் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும்.