சேப்பங்கிழங்கு சாப்பிடுங்க..கிடைக்கும் பலனை பாருங்க..
சேப்பங்கிழங்கில் கிரிப்டோக்சாந்தின் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு, பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை தருகின்றன.
சேப்பங்கிழங்கில் பாலிபினால்கள் எனப்படும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள் உள்ளன, அவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் திறன்கொண்டது.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் கிரிப்டோக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண்பார்வையை பலப்படுத்துகிறது.
இதிலிருக்கும் ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாடிக்காக செயல்பட்டு, குடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கிறது.
சேப்பங்கிழங்கில் உள்ள வைட்டமின் சி ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்து நிறைந்துள்ளன. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர்ப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது.
சேப்பங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, கெட்ட கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான உடல் எடைக்கு வழிவகுக்கிறது.