தக்காளி சாறு: தக்காளி சாற்றில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவி செய்யும்.
கற்றாழை சாறு: கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்கவும், மென்மையான சரும பொலிவை தக்க வைக்கவும் உதவும்.
இளநீர்: இதில் எலெக்ட்ரோலைட்கள் உள்ளன. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவும்.
கிரீன் டீ: இதில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் எந்தவித சேதமும் அடையாமல் சருமம் பாதுகாக்கப்படும்.
மாதுளை சாறு: சருமத்தில் முன்கூட்டியே முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுப்பதில் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. சருமம் சேதம் அடைவதை கட்டுப்படுத்தவும் செய்யும். அதனால் அடிக்கடி மாதுளை ஜூஸ் பருகுவது சருமத்திற்கும் நல்லது.
கேரட் ஜூஸ்: இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு இந்த ஜூஸை அடிக்கடி பருகுவது அவசியம்.
பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் ஜூஸில் ஆன்டிஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சரும பொலிவை மேம்படுத்தவும், சரும வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
இஞ்சி டீ: இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சருமம் சிவத்தல் மற்றும் வீக்கம் அடைதல் போன்ற பாதிப்புகளை குறைக்க உதவும்.