நரம்புத்தளர்ச்சியை தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை..!
அன்றன்று தங்களது கால்களைக் கண்ணாடியில் பார்த்து அதில் கால் ஆணிகள், கட்டைவிரல் நகத்தில் பாதிப்பு,கால் விரல்களுக்கு இடையில் சிரங்குகள் போன்றவை உள்ளனவா என ஆய்ந்தறிய வேண்டும்.
செய்ய வேண்டியவை : கால்களையும், விரல்களையும் மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும்.
கால் நகங்களை நேராக வெட்ட வேண்டும்.
காலணிகளை அணியாமல் வெறும் கால்களுடன் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
காலுக்குப் பொருத்தமான காலணிகளையே அணிய வேண்டும்.
கால்களை ஈரப்பதமாக வைக்கத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை :சூடான நீரில் பாதங்களை வைக்க வேண்டாம்.
கால் ஆணிகளைத் தாமே வெட்டிக் கொள்ள வேண்டாம்.
பாதம் தொடர்பான சிக்கல்களுக்குத் தமக்குத் தாமே மருத்துவம் செய்ய வேண்டாம்.
புகையிலை மற்றும் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
அதிக நேரம் கால்மேல் கால்போட்டு உட்கார வேண்டாம், ஏனெனில் இதனால் கால் பாதங்களுக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும்.