காரம் சுவையை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆபத்துதான். அப்படி அதிகமாக சிவப்பு மிளகாய் பொடியை பயன்படுத்துவதால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
காரம் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிட்ட பிறகு பலருக்கு வயிறு மற்றும் மார்பில் தொடர்ந்து எரிச்சல் இருக்கும்.
அதிக காரமான உணவை உட்கொள்வதன் மூலம், வயிற்றில் அதிக அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது.
சிவப்பு மிளகாய் பொடியை உணவில் அதிகம் பயன்படுத்தினால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும்.
சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும்.
சிவப்பு மிளகாய் தூள் அதிகமாக சாப்பிடுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கிறது என கூறப்படுகிறது.