நீங்க சிறந்த தந்தையாக இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க...
நிபந்தனை இல்லாத அன்பு: தந்தை தன் பிள்ளைகளிடம் காண்பிக்கும் அன்பும், பாசமும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாததாகவும், நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும்.
பொறுமை: ஒவ்வொரு தந்தைக்கும் நிச்சயம் இருக்க வேண்டிய குணம் பொறுமை.குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். அவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு சட்டென்று கோபத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது.
ஊக்கம்: சிறந்த தந்தையானவர் பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களையும் நேரடியாக கண்காணித்து ஊக்கம் அளித்துக்கொண்டே இருப்பார்.படிப்பிலோ, விளையாட்டிலோ சிறந்து விளங்கும்போது வாழ்த்து கூறி உற்சாகப்படுத்த வேண்டும்.
நம்பகத்தன்மை: நெருக்கடியான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எத்தகைய நிலையிலும் தந்தை தனக்கு பக்கபலமாக இருப்பார் என்ற நம்பகத்தன்மையை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்.
முன்மாதிரி: தந்தையானவர் தன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். நேர்மையுடன் செயல்பட வேண்டும். இரக்க குணம் படைத்தவராகவும், பிறருக்கு உதவும் உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
கேட்கும் திறன்: சிறந்த தந்தைக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணாதிசயங்களுள் ஒன்று பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்பது. எந்த நேரத்தில் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும்.
ஒழுக்கம்: சிறந்த தந்தை ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அவரின் நடத்தையிலும், செயலிலும் அது வெளிப்பட வேண்டும்.