குழந்தைகளை கவரும் கிறிஸ்துமஸ் தாத்தா யார் தெரியுமா?
கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரம் கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்.
கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர் `செயின்ட் நிக்கோலஸ். அவர் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார்.
துருக்கியில் பிறந்த அவர், ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது செல்வம் அனைத்தையும் கொடுத்து உதவியவர்
1822-ம் ஆண்டு கிளமென்ட் மூர் எழுதிய `கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு' எனும் கட்டுரையில் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
குழந்தைகளிடம் அதிகம் பிரியம் கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா பழங்கள், சாக்லேட்கல், சிறு பொம்மைகள் மற்றும் சிறு பொருட்களை பரிசாக வழங்குவார்.
16-ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயிண்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸின் பழக்கங்களை பின்பற்றினர்.
அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி வயிறுடன், பல வண்ண உடையணிந்து இருப்பார் என்று சித்தரிக்கப்பட்டார்.
தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுக்கும் தாராள மனதை கற்றுக்கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா, அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அழைப்பு விடுப்பவராக இருக்கிறார்.