வளரும் கல் என அழைக்கப்படும் தாவரம் எது தெரியுமா?

பார்ப்பதற்கு கற்கள் போன்று தோற்றமளிக்கும் இதன் பெயர், லித்தோப்ஸ்.
வளரும் கல் என்று அழைக்கப்படும் இது ஐசோஏசியே என்னும் பனித்தாவர குடும்பத்தை சேர்ந்தது.
தென் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இதனை கூழாங்கல் தாவரம், உயிர்க்கல் என்றும் கூறுவதுண்டு.
பார்ப்பதற்கு இது கற்களை போன்று காட்சி அளிக்கும். இலைகள்தான் அப்படி கற்கள் போன்று அமைந்திருக்கின்றன.
இத்தாவரத்துக்கு தண்டு கிடையாது. மணல் மீது சிறிய, சிறிய கற்கள் பரந்து விரிந்து கிடப்பது போல் காட்சியளிக்கும்.
இது கல் போன்று தோற்றமளித்தாலும் இலைகள் சதைப்பற்று கொண்டவை.
அரை வெட்டு தோற்றத்தில் காணப்படும் இலைகளின் நடுவே பூக்கள் பூக்கும் தன்மைகொண்டது.
விலங்குகள் சாப்பிடுவதை தடுக்கவும், வறண்ட சூழலில் வளர்வதற்கு ஏற்பவும் இத்தகைய அமைப்பை கொண்டிருக்கின்றன.