உலகின் மகிழ்ச்சியாக சிரிக்கும் விலங்கு எது தெரியுமா?
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட குவோக்கா, கங்காருவின் இனத்தை சார்ந்த சிறிய உயிரினமாகும்.
இது `உலகத்தின் மகிழ்ச்சியான விலங்கு' என்று அழைக்கப்படுகிறது.
அதற்கு காரணம் அதனுடைய முகத்தில் இருக்கும் சிரிப்புதான். குவோக்கா, மனிதர்களை கண்டு அஞ்சுவதில்லை. மாறாக அவர்களோடு எளிதாக பழகும் ஓர் அரியவகை காட்டு விலங்காக திகழ்கிறது.
இவை பெரும்பாலும் சாம்பல் நிறத்துடன் காணப்படுகிறது. இதன் வால் மற்றும் பாதங்கள் தவிர உடல் முழுவதும் முடி இருக்கும்.
இது கங்காரு போன்று வயிற்றின் வெளிப்பகுதியில் குட்டிகளை சுமக்கும் பை போன்ற அமைப்பும் இருக்கிறது.
ஒரு குவோக்கா சுமார் 40 செ.மீட்டர் முதல் 60 செ.மீட்டர் நீளமும், 5 கிலோ வரை எடையும் கொண்டிருக்கும்.
இவற்றின் ஆயுட்காலம் வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே. இந்த விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பால்ட், ரோட்னெல்ட் மற்றும் பென்குயின் தீவுகளில் அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் அவற்றின் முகத்தில் இருக்கும் புன்னகை அதன் வாயின் வடிவத்தால் ஏற்படுகிறதே தவிர மகிழ்ச்சியின் வெளிப்பாடு அல்ல என்று கூறப்படுகிறது.