ஜப்பானிய சகோதரர்களான யுவான் ஜோஸ் மற்றும் பாஸ்டோ எல்குரியர் என்பவர்கள் கரியை பயன்படுத்தி ‘டங்ஸ்டிக்’ என்ற அமிலத்தின் மூலம் டங்ஸ்டனை பிரித்து எடுத்தனர்.
இதன் வேதியல் சின்னம் ‘w'. இது டங்ஸ்டனின் முந்தைய பெயரான உல்ப்ராமில் இருந்து பெறப்பட்டு உள்ளது.
இந்த தனிமம் உல்ப்ரமைட், ஷீலைட் போன்ற பல தாதுக்களில் காணப்படுகிறது. இது கடினமான உலோகங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சிமெண்ட் கார்பைடு தயாரிப்பதற்கு டங்ஸ்டன் மிகப்பெரிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சிமெண்ட் கார்பைடு என்பது இயந்திரங்களை தயாரிப்பதற்கான அடிப்படை பொருளாக விளங்குகிறது.
துளையிடுவதற்கும் தோண்டுவதற்கும் பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் உள்ள பிளேடுகளில் இந்த டங்ஸ்டன் தான் உள்ளது.
வில்லியம் கூலிஜ் என்பவர் தான் முதன் முதலில் டங்ஸ்டனை ஒளிவிளக்குகளில் இழைகளாக பயன்படுத்தினார். மேலும் மருத்துவ கருவிகள் உருவாக்கத்திலும் டங்ஸ்டன் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலக சந்தையில் மிகப்பெரிய விற்பனை பொருளாக காணப்படும் டங்ஸ்டனை உயர்வெப்பநிலையில் உருக்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.