ஐக்கிய நாடுகள் சபை பற்றி தெரியுமா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அமைதிக்காக 1945-ம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கினார்கள்.
ஐ.நா. சாசனம் 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டின் முடிவில் கையெழுத்திடப்பட்டு, அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடைமுறைக்கும் வந்தது.
தொடக்கத்தில் மொத்தம் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐ.நா சபையில் இணைந்து கையெழுத்திட்டனர். அதன்பிறகு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது 193 உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கின்றன. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக அமைதி மட்டுமல்லாது பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல் மற்றும் ஒத்துழைப்பை பேணும் ஒரு பன்னாட்டு அமைப்பாகும்
ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதித்து தூதரக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்சிகளும் நடத்தப்படும்.
ஐ.நா. உறுப்பு நாடுகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இசை, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அடுத்த தலைமுறையினரை போரின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதே ஐ.நா. சாசனத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இருந்தபோதிலும், ஐ.நா. சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 250-க்கும் மேற்பட்ட ஆயுத மோதல்கள் நடந்துள்ளன.
உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா.விடம் அமைதிப்படையும் உள்ளது.