கார்கள் இல்லாத நகரம் எது தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெர்மாட் நகரம் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்த அழகிய இடம் நீண்ட காலமாகவே `கார்கள் இல்லாத நகரம்’ என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் மாசுப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த நகரத்தின் 5 கி.மீட்டருக்கு அப்பால்தான் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இங்கு ரெயில், மின்சார பேருந்து மற்றும் குதிரை வண்டிகள் மூலமாகத்தான் சுற்றுலாப் பயணிகள் நகரத்தின் அழகை ரசிக்க முடியும்.
இங்கு வருபவர்கள் தூய்மையான காற்று, அமைதியான கண்கவர் இடங்கள், குறைவான நெரிசல் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
அன்றாட வாழ்க்கையின் சலசலப்புகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவோருக்கு இந்த நகரம் மிகவும் பொருத்தமானது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் இங்கு இயங்காததால் ஒலி மாசுபாடு, கார்பன் உமிழ்வு, வாகனங்களின் புகை காணப்படுவதில்லை.
ரெயிலில் பயணிக்கும்போது பனி மூடிய மலைகள், வசீகரமான கிராமங்கள் மற்றும் அழகிய ஏரி களின் பரந்த காட்சிகளை காண முடியும்.