தீபாவளி லேகியம் வீட்டிலேயே தயாரிக்கலாம் !!
தேவையான பொருட்கள் : சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி, மிளகு, ஓமம், சீரகம்,கொத்தமல்லி விதை, கருப்பு மிளகுத்தூள், வால் மிளகு, திப்பிலி, உலர்ந்த பேரீச்சை பழம், உலர்ந்த திராட்சை, வெல்லம், நெய்
முதலில் சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி, மிளகு, ஓமம், சீரகம், கொத்தமல்லி விதை, வால் மிளகு, ஆகியவை எடுத்து எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுக்கவும்.
அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பாத்திரத்தில் 8 முதல் 9 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அப்போது தான் அரைப்பதற்கு வசதியாக இருக்கும்.
மற்றொரு பாத்திரத்தில் உலர்ந்த பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை ஆகியவை ஊற வைக்கவும்.
பின்னர் ஊற வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஓன்று சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து வெல்லம் பாகு தயார் செய்து வடிகட்டி வைக்கவும்.
பின்னர் அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதக்கிய பிறகு வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் மிதமான தீயில் வைத்து கரண்டியால் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அடி பிடிக்க கூடும்.
கலவை நன்றாக வெந்தவுடன் இறக்கிவிடவும். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு அல்வா பதத்துக்கு வரும் போது மீண்டும் கிளறி இறக்கவும்.
தற்போது காரம், இனிப்பு கலவையில் சுவையான லேகியம் தயார்.
தீபாவளி அன்று எண்ணெய் குளியல் முடித்ததும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் எடுத்துகொள்ள வேண்டும். இது தீபாவளி நந்நாளில் இனிப்புகள் மற்றும் கார உணவுகளுக்கு ஏற்றவாறு குடலை தயார் செய்யும்.