வால் மிளகு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற பகுதிகளில் பயிர் செய்கின்றனர். இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.
வால் மிளகு காரத்துடன் கூடிய வலுவான சுவையுடையது. இதனை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
வால் மிளகு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. வயிற்று புண் மற்றும் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் வால் மிளகை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது மேலும், வயிற்று எரிச்சலை அதிகப்படுத்தும்.
வால் மிளகு ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யக்கூடியது. ஆனால் அதிகமாக எடுத்து கொண்டால் ஆண்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
வயதானவர்கள், வால் மிளகினை அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.