சுவையான முந்திரி இடியாப்பம்..!

தேவையான பொருட்கள்: முந்திரிப்பருப்பு, புழுங்கல் அரிசி, ஏலக்காய், சுக்கு, நெய், உப்பு தேவையான அளவு
செய்முறை: முதலில் அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.
பின்பு முந்திரிப்பருப்பை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஊறிய அரிசியையும், அதனுடன் முந்திரிப்பருப்பையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைத்த மாவு வெண்ணெய் போல கெட்டியாக இருக்க வேண்டும். அந்த பதம் வந்ததும் மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அடுத்து ஏலக்காயையும், சுக்கையும் பொடித்து மாவுடன் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பின்னர் இடியாப்பக் குழலில் மாவைப் போட்டு இட்லித் தட்டில் பிழியவும். தட்டை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேகவிடவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
இதுவே முந்திரி இடியாப்பம். சர்க்கரை அல்லது வெல்லத்தூள் போட்டு சாப்பிடவும். தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப் பிட்டால் இன்னும் சுவையாக, மணமாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.