உச்சி முதல் பாதம் வரை நன்மைகளை வழங்கும் பேரீச்சம்பழம்..!
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.
பேரீச்சம்பழம் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அமைந்துள்ளது.
பேரீச்சம் பழத்தில் ஆன்ட்டிஆக்சிடென்ட் தன்மை உள்ளதால், இது சருமத்தை இளமையாக வைக்கவும், சரும செல்களின் பாதிப்பை குணமாக்கவும் உதவுகிறது.
தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடையை சீராக பராமரிக்கிறது.
பேரீச்சம்பழத்தில் நிறைந்திருக்கும் கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகின்றன.
பேரீச்சம்பழத்தில் சரியான அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சோகையை சரிசெய்யும் குணம் கொண்டது.
பேரீச்சம்பழத்தில் மெக்னீசியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் பண்புகள் காணப்படுவதால் இவை மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கலாம்.
இது நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நரம்பு செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
பேரீச்சம்பழங்களில் பீட்டா-டி-குளுக்கன் போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன, இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கலாம்.