கோடைகாலத்துக்கு ஏற்ற தயிர்..!

கோடைகாலத்துக்கு ஏற்ற தயிர்..!

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியை தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
தயிரில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தயிரில் வைட்டமின் பி12 மற்றும் டி அதிகளவு காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
தயிர் குறைந்த கலோரி நிறைந்த உணவாகும். இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு வழிவகை செய்யும்.
தயிர் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இவை உடலில் உள்ள ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பேணக்கூடியது.
தயிரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
தயிரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது இறந்த சரும செல்களை அகற்றி ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கக்கூடும்.
தயிரில் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது, இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.