கொள்ளில் கொட்டிக்கிடக்கும் கோடி நன்மைகள்..!
கொள்ளில் ஊட்டசத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, தாதுபொருள்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், மாதவிடாய் பிரச்சினைகளை சரிப்படுத்தவும் கொள்ளு உதவுகிறது.
கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக்கின் (Antihyperglycemic) மூலமாகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாகும்.
இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை போக்குகிறது.
இது சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் தன்மைகொண்டது.
இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது.
கொள்ளை கொதிக்கவைத்து அந்த தண்ணீரை அருந்துவதால், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் மற்றும் காய்ச்சலை குணமாக்கும் தன்மைகொண்டது.
இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு வழிவகுக்கும்.
இதில் உள்ள புரதம் திசுக்களை முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகிறது.