பொதுவான மழைக்கால நோய் தடுப்பு முறைகள்..!

பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது.
பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவைகளை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலைகள் பயன்படுத்துவது நல்லது.
மழைநீரில் நனைந்தால் அல்லது குளித்தால் தலையை ஈரம் நீங்க நன்றாக துடைக்க வேண்டும்.