கிறிஸ்துமஸ் வந்தாச்சு..உறவினர்களுக்கு கொடுத்து மகிழ தித்திப்பான தேங்காய் அல்வா..!

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு.தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய், உலர் திராட்சை, எண்ணெய் ஆகியவை.
முதலில் முந்திரி மற்றும் பாதம் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து தேங்காய் துருவலை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த முந்திரி, பாதாம் கலவை, தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.
கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றி, மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பிறகு உலர் திராட்சை சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.