செட்டிநாடு ஸ்டைலில் சிக்கன் தொக்கு..!
தேவையான பொருட்கள் : சிக்கன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர், மிளகுத் தூள், உப்பு, எண்ணெய், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, தண்ணீர், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவை.
முதலில் சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளக வெட்டி ஒரு பதத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை நன்கு வதக்கிய பிறகு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 7 நிமிடங்களுக்கு நன்றாக கிளற வேண்டும்.
பின்னர் தொக்கு சற்று கெட்டியாக இருப்பதற்காக, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து,10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்திருக்கும் இப்போது அதில் மிளகுத் தூள் மற்றும் கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் தொக்கு தயார்.