மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்..!
மாவுச்சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் எடுத்துக்கொள்ளுவது.
நாம் உண்ணும் உணவில் இருந்து பெருங்குடல் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சும் போது இது நிகழ்கிறது.
செரிமான மண்டலத்தின் மெதுவான அசைவால், பெருங்குடலில் அதிக நீர் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக மலம் உலர்ந்து மலம் கழித்தல் கடினமாகவும், வலியாகவும் மாறுகிறது.
உணவில் போதிய நார்ச்சத்து சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது.
மலம் வரும் போது அதைக் கழிக்காமல் அடக்குவது.
சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வேலை செய்வது.
சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது.
உடல் சூடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.