சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை ஒரு மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது.
ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட் ஒரு முட்டையில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. (0.5 கிராம்)
இதில் உள்ள அதிகமான அளவு புரதம் (புரோட்டீன்) செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது .
முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12 ஆகியவையும் தசை மற்றும் நரம்புகளுக்கு தேவையான பொட்டாசியம், தோலுக்கு முக்கியமான வைட்டமின் பயோடின், மூளை வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும்.
ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது. இதில் 15 கலோரிகள் வெள்ளைப் பகுதியிலும், 60 கலோரிகள் முட்டையின் மஞ்சள் பகுதியிலும் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாம்.
மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதி மட்டும் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம்.
முட்டையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இதை ஒரு முழுமையான புரதம் (கம்ப்லீட் புரோட்டின்) என்று அழைக்கிறார்கள்.
ஒரு முட்டையின் மஞ்சளில் கிட்டத்தட்ட 184 கிராம் கொலஸ்ட்ரால், 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதை தவிர்ப்பது நல்லது.