சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?

ஊட்டச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை ஏறக்குறைய சரியான சமநிலையில் உள்ள ஒரு முழு உணவாக பால் விளங்குகிறது.
இது 31 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றதாக கருதப்படுகிறது.
பாலில் உள்ள கேசின் புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு எலும்பின் ஆரோக்கியம் மற்றும் உறுதிக்கு துணை புரிகிறது.
புரதத்தில் உள்ள கிளைத்தொடரி அமினோ அமிலங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், தசைகள் திறம்பட செயல்படுவதற்கும் உதவுகிறது.
பாலில் 87 சதவீதம் நீர் இருப்பதால் நீர்ச்சத்து குறைபாடு வராமலும் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம், ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தம் குறைவதற்கு உதவி புரிகிறது.
பாலில் உள்ள டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் ஹார்மோன்கள் இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு துணை புரிகிறது.
பாலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு டம்ளர் வரை பால் குடிக்கலாம்.