பெண்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் பிராய்லர் கோழிக்கறி..!
பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.
பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இதய பிரச்சினை ஏற்படக்கூடும்.
பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதனால் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். இதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். இதனால் நோய் தோற்று ஏற்படக்கூடும்.
பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.